தமிழகம்

வன்னியர்களுக்கு 20% ஒதுக்கீடு கோரி நடந்த முதல்கட்ட போராட்டம் நிறைவு: பாமக தலைவர் ஜி.கே.மணி தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் முதல்கட்ட போராட்டம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

4-வது நாள் போராட்டம் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நேற்று நடந்தது. ஜி.கே.மணி தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் உட்பட பாமக, வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில் ஜி.கே.மணி பேசும்போது, “அடித்தட்டு மக்களை மேலே தூக்கிவிடுவதுதான் சமூகநீதி. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்டுள்ள முதல்கட்ட போராட்டம் இத்துடன் நிறைவடைகிறது. அடுத்தகட்டமாக, அனைத்து கிராமங்களிலும் விஏஓக்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும்” என்றார்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அனைவரையும் போலீஸார் கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

SCROLL FOR NEXT