தமிழகம்

கொஞ்சம், கொஞ்சமாக விற்பனையை அதிகரியுங்கள்’ - கஞ்சா விற்பவரிடம் தேனி போலீஸார் பேரம்

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், குரங்கணி பகுதியில் மது மற்றும் கஞ்சா விற்பனை செய்பவரிடம் போலீஸார் பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

குரங்கணி போலீஸார் கஞ்சா விற்பனை செய்பவரிடம் பேசுவதாக உள்ள அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளதாவது: மது, கஞ்சாவை தொடக்கத்திலேயே அதிகம் விற்கக் கூடாது. கொஞ்சம், கொஞ்சமாக அவற்றின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். ஒரே இடத்தில் மொத்தமாக ஸ்டாக் வைத்துக் கொள்ளக் கூடாது. ரெய்டு வராமல் இருக்க மாதம் ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும். நான் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வோம் என்று உள்ளது.

அதற்கு அந்த வியாபாரி "நீங்கள் (போலீஸார்) எங்களுக்குத் தெய்வம் மாதிரி.."என்று நெகிழ்ந்து கூறுகிறார். போடி சிறப்பு எஸ்.ஐ கருப்பையா, குரங்கணி காவல்நிலைய காவலர் குமார் ஆகியோர் கஞ்சா விற்பவரிடம் பேசுவதாக வைரலாகி வரும் இந்த ஆடியோபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT