பருவமழை, பண்டிகை காலங்களுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த அம்மாநிலங்கள் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. டெல்லியில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் விதிமுறைகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘3 வாரம் தொடர்ந்து அனைவரும் முகக் கவசம் அணிந்தால் தமிழகத்தில் கரோனா தொற்று இருக்காது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் எல்இடி திரை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது’’ என்றனர்.