உலக மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று (டிச. 3) கடைபிடிக்கப்படும் நிலையில் புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி ஆணையம் இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது. அவர்களுக்காக ஒதுக் கப்பட்ட நிதி முறைகேடாக பயன் படுத்தியது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மத்திய அரசு உத்தரவுப்படி ஏராளமான மாநிலங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி ஆணையம் அமைத்துள்ளன. ஆனால், புதுச்சேரியில் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணையம் அமைக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு மே 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்காக தனியே நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டி மத்திய அரசு அறிவுறுத்தியும் ஆணையம் அமைக்கப்படாமல் உள்ளது.
இன்று (டிச. 3) உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக் கப்படும் நிலையில், புதுச்சேரிஅரசுத் துறைகளில் அவர்களுக் கான நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அளித்த புகார்மீதும் இதுவரை நடவடிக்கைஎடுக்கவில்லை. இதையடுத்து மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,தலைமைச்செயலர் அஸ்வனி குமார் உள்ளிட்டோருக்கு ராஜீவ்காந்தி உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக புதுச்சேரியின் 28 அரசுத் துறை களுக்கு ரூ.5 கோடியே 26 லட்சத்து 31 ஆயிரத்து 700 நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை பல துறைகள் முறைகேடாக வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்தியது குறித்து கடந்த ஜூலை 27-ம் தேதி ஆளுநர், முதல்வர், தலைமை செயலர் ஆகியோருக்கு மனு அளித்தும் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
4 துறைகளில் செலவிடப்பட்ட செலவினங்களை தகவலாக பெற்றதன் அடிப்படையில், 4 துறைகளிலும் நிதியை முறைகேடாக வேறு பயன்பாட்டிற்கு உட் படுத்தியுள்ளது தெரிய வந்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீதமுள்ள துறைகளின் செலவினங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்தஅக்டோபர் 9-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் மத்திய ஆணையர் மற்றும் இது சம்பந்தப்பட்ட டெல்லியில் உள்ள 9 அதிகாரிகளுக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் மத்திய தலைமை ஆணையம் புதுச்சேரியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையத் தில் முறையிடுமாறு வழிகாட்டுதல் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் இங்கு அது போன்ற ஆணையம் அமைக்கப்படவில்லை. அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிஆணையரை நியமிக்க வேண் டும். இவர்களின் நலனுக்காக ஒதுக் கப்பட்ட நிதியை முறைகேடாக செலவிடப்பட்டுள்ள அதிகாரிகள் மீதும், மீதமுள்ள துறைகளின் செலவினங்கள் குறித்தும் விசாரணை செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு உத்தரவுப்படி ஏராளமான மாநிலங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஆணையம் அமைத்துள்ளன.