மனிஷா 
தமிழகம்

அரசுப் பணி ஆணை பெற்று ஊர் திரும்பியபோது சோகம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அரசுப் பணி ஆணை பெற்று ஊர் திரும்பியபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர் குரு நாதன்(54). இவரது மகள் மனிஷாஸ்ரீ (23). குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். பணியிடத் தேர்வு கலந்தாய்வில் பங்கேற்க தந்தை குருநாதன், அக்காவின் கணவர் அய்யனார் ஆகியோருடன் சென்னை சென்றார். நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து செங்கோட்டை சிறப்பு ரயிலில் ஊருக்குப் புறப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை ஸ்ரீவில்லி புத்தூர் கோப்பையநாயக்கர்பட்டி அருகே ரயில் சென்றபோது மனிஷாஸ்ரீ காற்றுக்காக படிக்கட்டு அருகே நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். மகள் கீழே விழுந்ததை அறியாமல் தந்தை குருநாதன், மாமா அய்யனார் ரயி லில் அயர்ந்து தூங்கினர்.

ரயில் சங்கரன்கோவில் வந்த வுடன் குருநாதனும் அய்யனாரும் மனிஷாயை தேடியுள்ளனர். அவர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து ரயில்வே போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.

ரயில்வே போலீஸார் விசார ணையில் வில்லிபுத்தூர் அருகே தண்டவாளத்தில் மனி ஷாஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்தது. சென்னையில் நடந்த கலந்தாய்வில் அவருக்கு ஊரக மருத்துவத் துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT