கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நூலை திமுக தலைவர் கருணாநிதி வெளி யிட, கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா, நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார்.
விழாவில் கருணாநிதி பேசிய தாவது:
ஒரு மொழியின் மிகச்சிறந்த வடிவம் சிறுகதை. உலகப் பேரி லக்கியமான பைபிளில் ஏராளமான சிறுகதைகள் உள்ளன. நபிகள் நாயகம் சிறுகதைகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்தி யுள்ளார். அண்ணாவும் தனது கருத் துகளை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். நானும் பல சிறுகதைகள் எழுதியி ருக்கிறேன்.
வைரமுத்து என்னை ஆசான் என்றார். நான் அவரை தம்பி என்று அழைக்கிறேன். அவர் தனது சிறுகதைகள் மூலம் சமூகத் தில் உள்ள எல்லா பிரச்சினை களையும் அலசி ஆராய்ந்திருக் கிறார். அதற்கு தீர்வு காண முயன்றிருக்கிறார். அவரது இப் பணி தொடர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
எப்படியும் இருக்கலாம்
கமல்ஹாசன் பேசும்போது, ‘‘வைரமுத்து சிறுகதைகள் என்ற இந்த நூலில், சிறுகதைகளைவிட அவரது முன்னுரை என்னை ஆச்சரி யப்பட வைத்தது. பெர்னாட்ஷாவின் நாடக நூல்களை அவரது முன்னு ரைக்காகவே பலர் வாங்கு வார்கள். அதுபோல வைரமுத்து வின் முன்னுரைக்காகவே இந்த நூலை அனைவரும் வாங்க வேண்டும். வைரமுத்து சிறுகதை கள் கவிதை நடையில் இருப்பதாக சிலர் விமர்சனம் வைக்கிறார்கள். இந்த நூல் உங்களின் சமையல். அதன் சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிறுகதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதி கிடையாது. எப்படி வேண்டுமானாலும் இருக்க லாம். திருக்குறள்கூட ஒரு சிறு கதைதான். எனவே, கவிதை நடை என்ற விமர்சனம் குறித்து சீற்றம் கொள்ளத் தேவையில்லை’’ என்றார்.
தமிழை கற்று தரவேண்டும்
ஏற்புரை நிகழ்த்திய வைரமுத்து, ‘‘பிழையில்லாமல் தமிழ் எழுத இளம் தலைமுறையினருக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். தொலைக்காட்சிகள், தமிழ்க் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி நல்ல தமிழை கற்றுத்தர வேண்டும். எல்லா பள்ளி, கல்லூரிகளிலும் இலக்கிய வாசிப்பு வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அதன்மூலம் நல்ல இலக்கியங்கள் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாடு, புத்தக விற்ப னையில் உலகத்தில் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலை மாற வேண்டும். உற்பத்தித் துறை யில் நம்நாடு பின்தங்கி இருப்ப தால், வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டி யதிருக்கிறது. இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.