தமிழகத்தில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கு மாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ டி.எஸ்.ஆர். வெங்கட் ரமணா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் வாகனங்கள் விரைவாக செல்ல அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ. தூரத்துக்கு ஒரு சுங்கச்சாவடி அமைத்து, அச்சாலையை பயன் படுத்துவோரிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தியா முழுவதும் ஆண்டுக்கு ரூ.16,500 கோடி சுங்கக் கட்டணம் வசூ லாகிறது.
மத்திய சாலை நிதிக்கு ஒவ் வொரு லிட்டர் பெட்ரோல், டீச லுக்கு ரூ.6 வசூல் செய்யப்படு கிறது. இவ்வாறு ரூ.25 ஆயிரம் கோடி வசூலாகிறது. இது தவிர விற்பனை வரியாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருகிறது. இதனால் தனியாக சுங்கக்கட்டணம் வசூல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
எனவே, சுங்கக் கட்டணம் வசூ லிக்கத் தடை விதித்தும், சுங்கக் கட்டணம் வசூல் தொடர்பான தேசிய நெடுஞ்சாலை விதி 8-ஐ செல்லாது என அறிவிக்க வேண் டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. விசாரணையை அடுத்த மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.