அனைவருக்கும் கல்வி திட்டத்துக் கான மத்திய அரசின் பங்களிப்பை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந் திர மோடிக்கு அவர் நேற்று அனுப் பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் கல்வி திட்டத் துக்கு 65:35 என்ற மத்திய - மாநில அரசு பங்கீடு அடிப்படையில் ரூ.2,329 கோடிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து மே, செப்டம்பர் மாதங்களில் ரூ.552 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 14-ம் தேதி மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எழுதிய கடிதத்தில், 50 சதவீத பங்குத் தொகையை மட்டுமே நிதி அமைச் சகம் அளித்துள்ளதாக தெரிவித் தது. நாடு முழுவதும் அனைவரும் தொடக்கக் கல்வி பெறுவதற் கான இலக்கை கொண்டது அனைவருக்கும் கல்வி திட்டம். இத்திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான நிதியை வழங்குவது அவசியம்.
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு செலவாகும் நிதியை ஈடுகட்ட மத்திய அரசு கூடுதல் வரி மற்றும் கட்டணங்கள் விதித்துள்ளது. ஆனால், இவற் றின் மூலம் கிடைக்கும் வரு வாய் முழுவதையும் மத்திய அரசே பெறுகிறது. மாநில அரசு களுடன் பகிர்ந்து கொள்வ தில்லை. கல்விக்கான வரியை பெற்றுக்கொண்டு, அனைவருக் கும் கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்கை குறைத்துள்ளது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
தமிழகத்தில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. ஏற்கெனவே 14-வது நிதி கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பல் வேறு திட்டங்களுக்கு நிதி குறைக் கப்பட்டதால் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட் டுள்ளது. இந்நிலையில், அனை வருக்கும் கல்வி திட்டத்துக்கான நிதியையும் குறைத்தால் சிக்கல்கள் அதிகமாகும்.
எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு குறைந்தபட்சம் 75 சதவீதம் நிதியை வழங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை தற்காலிகமாக நிதிப்பங்களிப்பு 65:35 என்ற சதவீதத்திலேயே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.