தமிழகம்

கனிமொழி கூட்டத்தில் ‘வெற்றிவேல், வீரவேல்' முழக்கம்

செய்திப்பிரிவு

ஈரோட்டில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘வீரவேல் வெற்றிவேல்’ என முழக்கம் எழுப்பப் பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

கனிமொழி எம்.பி., ஈரோடு கவுந்தப்பாடியில் நேற்று காலை திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது, திமுக தொண்டர் ஒருவர் அவருக்கு வாள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பாஜகவின் வேல் யாத்திரையை நினைவுபடுத்துவது போல், ‘வெற்றிவேல் வீரவேல்’ என அவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒலிபெருக்கியில்பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அங்கு கனிமொழி பேசவில்லை.

SCROLL FOR NEXT