மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்துள்ளதை காட்டும் விவசாயி. 
தமிழகம்

அரக்கோணம் அருகே கொள்முதல் நிலையத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

அரக்கோணம் அருகே அறுவடை செய்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யாததால் சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவ சாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அசநெல்லிக்குப்பம், சங்கரன்பாடி, பள்ளூர் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இங்கு, ராணிப்பேட்டை மாவட் டத்துக்கு உட்பட்ட களத்தூர், சித்தஞ்சி, பெரும் புலிப்பாக்கம், சங்கரன்பாடி, கிளார், பெரும்பாக்கம், முசரவாக்கம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பயிரிடப்படும் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்துள்ளதை காட்டும் விவசாயி.

அசநெல்லிக்குப்பம், சங்கரன்பாடி நெல் கொள்முதல் நிலையங்களில் 4 மாதங் களுக்கு ஒரு முறை நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 23-ம் தேதியுடன் நெல் கொள்முதல் முடிவடைந்து விட்டதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
அதன்பிறகு அறுவடை செய்து கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையம் முன்பாக ஆங்காங்கே பாது காப்பின்றி வைக்கப்பட்டது. நெல் கொள்முதல் காலம் முடிந்து விட்டதால், நீங்கள் (விவசாயிகள்) கொண்டு வந்த நெல் மூட்டைகளை வாங்க முடியாது என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பின்றி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் ‘நிவர்’ புயல் காரணமாக பெய்த கனமழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மழைநீரில் நெல்மணிகள் நனைந்ததால் சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந் துள்ளன. சில மூட்டைகளில் நெல்மணிகள் முளைத்து வீணாகிவிட்டதை கண்டு விவசாயிகள் வேதனையடைந்தனர்.
‘நிவர்’ புயலுக்கு முன்பே நெல் மூட்டை களை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்காது என்றும், கரோனா ஊரடங்கு காலத்தில் கடன் வாங்கி பயிரிட்டு அறுவடை செய்து எடுத்து வந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாகியுள்ளதற்கு அரசு அதிகாரிகளே காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.

மேலும், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நெல் கொள்முதல் செய்யும் நாட்களை நீட்டிக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றும், அதேநேரத்தில் தற்போது தேக்க மடைந்துள்ள நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT