காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக இல்லாத புதிய அணியை விரும்பும் கட்சிகள் மக்கள் நல கூட்டு இயக்கத் தில் இணையும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கடந்த 7, 8-ம் தேதிகளில் நடந்தது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை யில் நடந்த இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரத ராஜன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராஜன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறியுள்ள தாவது:
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் கடந்த ஜூலை 27-ம் தேதி உருவாக்கப்பட்டது. மணல், கிரானைட் கொள்ளை, மதுவிலக்கு, ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம், மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.
இதன் தலைவர்கள் திரு வாரூரில் கடந்த 5-ம் தேதி ஒன்றுகூடி, இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட் டத்தை தயாரிக்க குழு அமைத்தனர். குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் கோவையில் அடுத்த மாதம் நடக்க உள்ளது.
மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் காலத்தின் தேவை. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக இல்லாத புதிய அணி தேவை என்று உணரும் கட்சிகள் இதில் இணையும்.
பொது மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விசைத்தறி தொழிலாளி தங்கவேல், அவரது 11 வயது மகளை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். தங்கவேலின் மனைவிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.