தமிழகம்

சென்னை ரயில் குண்டு வெடிப்பு: விசாரணையில் முன்னேற்றம் இல்லை

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 1-ம் தேதி காலையில் வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவை சேர்ந்த ஸ்வாதி(24) என்ற பெண் பொறியாளர் பலி யானார். 14 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு குழு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு நபரையும், பெங்களூரில் இரண்டு பேரையும் சந்தேகப்படும் நபர்களாக அறிவித்து அவர்களை பிடிக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக் களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகள் மட்டுமே முழுவீச்சில் நடந்து வருகின்றன. குண்டு வைத்தது யார், எந்த அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதை சிபிசிஐடி காவல் துறையினரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “விசாரணையின் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். விரைவில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும்” என்றனர்.

SCROLL FOR NEXT