தமிழகம்

‘இந்து தமிழ் திசை’ - ‘ஓம் சாந்தி’ நடத்தும் கார்த்திகை தீப அலங்கார போட்டி

செய்திப்பிரிவு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் பரிசுத்தமான பூஜை பொருட்கள் தயாரிக்கும் ‘ஓம் சாந்தி’ நிறுவனமும் இணைந்து கார்த்திகை தீப அலங்காரப் போட்டியை நடத்துகின்றன.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அனைவரும் வீடுகளில் தீபங்களையேற்றி அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இதனால் சாந்தியும் மன அமைதியும் கிடைக்கிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் பரிசுத்தமான பூஜை பொருட்கள் தயாரிக்கும் ‘ஓம்சாந்தி’ நிறுவனமும் இணைந்துபோட்டி ஒன்றை நடத்துகின்றன.

இப்போட்டியில் பங்கேற்க தங்களது வீடுகளில் ஏற்றப் படும் கார்த்திகை தீப அலங்காரத்தோடு நீங்களும் இருக்கும் புகைப்படத்தை https://connect.hindutamil.in/event/72-karthigai-dheepam.htmlhtml என்ற லிங்க்கிலோ, அல்லது contesttamil@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முக வரிக்கோ அனுப்புங்கள்.

இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். போட்டிக்கான புகைப்படங்களை டிச. 2-க்குள் அனுப்பி வையுங்கள். சிறந்த 100தீப அலங்காரத்துக்கு ‘cycle.in’பரிசுகளை வழங்குகிறது.

SCROLL FOR NEXT