திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்து வப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு இருக்காது என்று அக்கட்சியினர் கூறிவரும் நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு வினா-விடை கையேட்டை திமுகவினர் வழங்கினர்.
திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மத்தியமாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது.
இம்முகாமை தொடங்கி வைக்க வந்திருந்த மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி, முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான வினா - விடை கையேட்டை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், “அடுத்து வரும் திமுக ஆட்சியில் நீட் தேர்வு இருக்காது” என்று தெரிவித்தார்.
நீட் தேர்வை திமுகவினர் எதிர்த்துவரும் நிலையில், அக்கட்சி சார்பில்நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வுக்கான வினா - விடை கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.