திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதலைவர் முரளி இராம.நாராயணன், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் நடிகர் எஸ்.வி.சேகர், என்.விஜயமுரளி, ராஜேஸ்வரி வேந்தன், டேவிட் ராஜ், ராஜ்சிற்பி,தயாரிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி எஸ்.முருகன் உடனிருந்தார்.
அண்ணா அறிவாலயத்தில், விக்கிரவாண்டி ஒன்றிய அதிமுகவிவசாய அணி துணை அமைப்பாளர் வி.பழநி தலைமையில் தேமுதிக ஒன்றிய பொருளாளர் பால்சிங், அதிமுக ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி துணை செயலாளர் யோகேஸ்வரன், பாஜககிளை தலைவர் ராஜ்கிரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.