செப்.5 - வள்ளலாரின் 192-வது அவதார தினம்
எளிய தமிழில் சமூகம், மொழி, சமயம், தேசியம், சர்வ தேசியம், பக்தி, முக்தி, அரசியல், பொரு ளாதாரம் ஆகிய அனைத்துத் துறை களைப் பற்றியும், சித்தாந்தம், வேதாந்தம் உள்ளடக்கிய தத்து வங்கள் பற்றியும் 6000-க்கும் மேற்பட்ட கவிதைகளும், கீர்த்தனை களும் பாடியவர் 19-ம் நூற்றாண் டின் ஆன்மீக மகான் வள்ளலார் ராமலிங்க அடிகள். நாளை அவரு டைய 192-வது அவதார தினம்.
இறைவன் ஒளிமயமானவர், அவர் படைத்த மனிதனும் ஒளிமய மானவர், இதை உணர்த்துவதற்காக வடலூரில் எண்கோண வடிவில் சத்திய ஞானசபையை நிறுவி, அங்கு ஜோதி தரிசன நிகழ்ச்சியை ஏற்படுத்தினார்.
சாதாரண மக்கள் பேசுகின்ற எளிய சொற்களையும் தொடர்களை யும் இலக்கிய வடிவில் பயன்படுத்தி, இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப் பத்தை ஏற்படுத்தியவர் வள்ளலார். சமுதாய ஆக்கம் கருதி வள்ளலார் பாடிய பாடல்கள் புதிய பண்பு கள் சமுதாயத்துக்கு எடுத்துரைக்கப் பட்டது.
அகில இந்திய அளவில் பல் வேறு பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் வள்ளலார் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித் துள்ளனர். அந்த வகையில் அருட்பா மருட்பா என்ற தலைப்பில் வள்ளலார் குறித்த ஆய்வு நடத்தி முனைவர் பட்டம் பெற்ற விருத் தாசலம் கொளஞ்சியர் அரசுக் கலைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியர் அமிர்தலிங் கம் தனது ஆய்வு குறித்து கூறியதாவது:
‘‘19ம் நூற்றாண்டில் வடஇந்தியா வில் தோன்றிய சமய சமூக சீர் திருத்த இயக்கங்களைபோல தென்னிந்தியாவில் ராமலிங்க அடிகள் 1865-ல் சமரச சுத்த சன் மார்க்க சத்திய சங்கத்தை தோற்று வித்தார். இவ்வியக்கத்தின் மூலம் ராமலிங்கர் தொடர்ந்த பணியால் தமிழகத்தில் சமய போக்கில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. வைதீக சமயத்தின் மீது வெறுப்புக் கொண்டிருந்தவர்களை வேறு சமயத்துக்கு போகாமல் இந்து சமயத்தின் மீது பற்றுக்கொள்ள செய்தார்.
ஆன்மீகவாதிகள் பெரும்பாலா னோர் காவி உடை அணியும் வேளை யில் வள்ளலார் மட்டும் வெள்ளாடை அணிந்தார். தூய்மையைக் குறிப் பது வெள்ளாடை. வெள்ளை நிறம் அன்புக்கும், நட்புக்கும், சமாதானத் துக்கும் பயன்படுத்துவதாலேயே வள்ளலாரும் வெள்ளை உடையை தேர்வு செய்தார்.
1858-ல் சென்னையிலிருந்து வந்த வள்ளலார் வடலூருக்கு அருகேவுள்ள கருங்குழியில் 1867 வரை வாழ்ந்தார். அப்போது, அவ ரது கொள்கை வழி அன்பர்கள் அவரை சந்திப்பது அதிகரித்தது. அவர்களை, தம்மையும் இணைத்து தொகுப்பாக குறிப்பதற்காக வடலூரில் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தார்.
எல்லா சமயங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் ஏற்புடைய உண்மைப் பொது நெறியை உள்ளடக்கித் தோன்றியதே சுத்த சன்மார்க்கமாகும்.
ஜீவ காருண்ய ஒழுக்கம்
வள்ளலார் எற்படுத்திய சன் மார்க்க சங்கத்தில் முக்கியக் குறிக் கோள் ஜீவ காருண்ய போதனையும்-சாதனையும், உயிர் கொலை தவிர்த்தல் - புலால் மறுத்தல், மூடப் பழக்க வழக்கங்களை கைவிடுதல்- சாதி வருணபேதம் ஒழித்தல், மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றி அறிவித்தல் ஆகியவையாகும். தனிமனித வாழ்விலும், செயலிலும், தயை குணத்துடனும், ஜீவ காருண்ய ஒழுக்கத்துடனும், அருள் உள்ளத்துடனும், தனி மனிதன் வாழவேண்டும் என்று வள்ளலார், தாம் அமைத்த சங்கத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார். எல்லா உயிர் களையும் சமமாகக் கருதியதால் தான் ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என பாடினார்.
பசி என்கிற நோய் தனிமனித னுக்கு மட்டுமல்லாது சமுதாயத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் உள்ள நோய் என்பதை உணர்ந்து தான், உயிரிரக்கம் வளர்வதற்குரிய சாதனமாகிய பசி ஆற்றுதலுக்கு சத்திய தருமச்சாலையை வடலூரில் 23-05-1867-ல் நிறுவினார். அன்று தோற்றுவிக்கப்பட்ட அடுப்பிலுள்ள தீ இன்றுவரை தொடர்ந்து எரிந்து பசி தீயை அணைத்து வருகிறது.’’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை பாரதியார் பல்கலை யில் வள்ளலாரின் உயிரிரக்கக் கொள்கைகள் எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி யின் முன்னாள் பேராசிரியையும், குறிஞ்சிப்பாடி எஸ்கேவி கலைக் கல்லூரியின் முதல்வருமான மாலதி கூறும்போது, ‘‘இரக்க உணர்வானது அனைத்துத் தரப்பு மக்களிடமும் வளரவேண்டும் என பெரிதும் விரும்பினார்.
சாதி, சமய, இன வேறுபாடு களால் மனிதமும், மனித நேய மும் சிதறுண்டு கிடக்கிறது. இக் காலச் சூழலுக்கு குறிப்பாக இளையோரிடத்தில் வள்ளலாரின் இரக்கக் கொள்கைகளை அவசியம் அறியச் செய்தல் வேண்டும். வள்ளலார் கண்ட இரக்க உணர்வும், மனிதநேயமும் நம்மிடையே வளருமானால் மக்களிடம் உள்ள அரக்க உணர்வு அழிந்து, இரக்க உணர்வு மேலோங்கும் என்பது திண்ணம்’’ என்றார்.