தமிழகம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடரும் வாய்ப்பு

செய்திப்பிரிவு

அரபிக் கடலில் உள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. எனவே கடந்த சில தினங்களாக மாநிலத்தின் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்திருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 8 செ.மீ, கோவை மாவட் டம் சின்னகலாரில் 6 செ.மீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், தேனி மாவட்டம் கூடலூர், அரண்மனைபுதூர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூர், திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, ஆய்க்குடி உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ மழை நேற்று முன் தினம் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு மழை படிப்படியாக குறையும்.

வெயில் குறைந்தது

அதிக மழை காரணமாக மாநிலத்தில் வெயில் சற்று தணிந்துள்ளது. மாநிலத்தில் ஒரு சில இடங்களில் சராசரி அதிகபட்ச வெயிலை விட குறைவான வெயில் பதிவாகியிருந்தது. தமிழ்நாட்டில் நேற்று சென்னையில் 33.7 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்து சேலத்தில் 32.9 டிகிரி, நாகப்பட்டினம் 32.1 டிகிரி, காரைக்கால் 32 டிகிரி, கடலூரில் 31.8 டிகிரி, கரூரில் 31.4 டிகிரி பதிவாகியது.

SCROLL FOR NEXT