திண்டுக்கல்லில் நடந்த திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக்கூட்டத்தில் தொகுதிவாரியாக வழக்கறிஞர்கள் குழு அமைக்கநடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக வழங்கறிஞர்கள் அணி கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி, தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர்
தங்கதமிழ்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமாட்சி வரவேற்றார்.
திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாநில வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
2021 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும்விதமாக தொகுதிவாரியாக வழக்கறிஞர்கள் குழுவை அமைக்கவேண்டும். தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.