தமிழகம்

நிவர் புயல் எச்சரிக்கை: நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை தொடங்கியது

செய்திப்பிரிவு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை புறநகர் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து தென்னக ரயில்வே சென்னை கோட்ட அதிகாரி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் இன்று (26.11.2020) மதியம் 3 மணி தொடங்கி இரவு 8 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதன்படி

1) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்

2) அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்

3) சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி

4) கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல்

5) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு

6) செங்கல்பட்டு - சென்னை சென்ட்ரல்

ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்படவுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT