மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி பகுதியில் ரூ.90 லட்சத்தில் தூர்வாரப்பட்டுள்ள பரவை கண்மாயை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.
அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ரூ.105 கோடி செலவில் பல கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ரூ.90 லட்சத்தில் பரவை கண்மாய் தூர்வாரப்பட்டு தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது.
புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க அனைத்து கடைகளிலும் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. திமுகவில் முதலில் ஸ்டாலின் மட்டும் நாடகமாடிக் கொண்டிருந்தார். தற்போது அவரது மகன் உதயநிதியும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார் என்றார்.