மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தை சுற்றி தேங்கி நிற்கும் மழை வெள்ளம். 
தமிழகம்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் மழைநீர் புகுந்தது

செய்திப்பிரிவு

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்தது.

திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த மறைந்த கருணாநிதியின் இல்லம் சென்னை கோபாலபுரம் 4-வது தெருவில் உள்ளது. பழமையான வீடு என்பதால் மழைக்காலங்களில் வீட்டின் வளாகத்தில் தண்ணீர் புகுவது வழக்கமாக உள்ளது. நிவர் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கன மழையால் கருணாநிதியின் இல்லத்தில் நேற்று மழைநீர் புகுந்தது. வீட்டுக்குள் தண்ணீர் செல்லாமல் பணியாளர்கள் அவ்வப்போது தண்ணீரை அகற்றி வருகின்றனர். மழைநீரில் வாகனங்கள் மிதக்கும் அபாயம் இருப்பதால் வாகனங்களை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தினர்.

SCROLL FOR NEXT