குமராட்சி ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள புயல் மீட்பு உபகரணங்கள். 
தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தயார் நிலையில் புயல் மீட்பு உபகரணங்கள்

க.ரமேஷ்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புயல் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் இன்று (நவ. 25) மாமல்லபுரத்துக்கும் காரைக்காலுக்கும் இடையே புதுச்சேரியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் புயல், மழை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புயல், மழை தடுப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, கூடுதல் ஆட்சியர் ராகோபால் சுங்காரா ஆகியோரின் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் புயல் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜேசிபி, மின்சார மரம் அறுக்கும் வாள், ஜெனரேட்டர், கயிறு, மணல் மூட்டைகள், குடிநீர் வாகனம், முதலுதவி பெட்டி உள்ளிட்ட அனைத்துப் புயல் மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதுகாப்புப் பணியை கவனிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி வருவாய்த்துறையினரும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குமராட்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் குமராட்சி மண்ணின் மைந்தர்கள் அமைப்பினர் உள்ளிட்ட குழுவினர் புயல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT