‘நிவர்’ புயல் கண்காணிப்பு, மீட்பு பணிக்காக மாவட்ட வாரியாககாவல் துறை உயர் அதிகாரிகளை நியமித்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், நிவர் புயல் கண்காணிப்பு, மீட்பு பணிக்காக மாவட்ட வாரியாக காவல் துறைஉயர் அதிகாரிகளை நியமித்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:
சென்னை - செயலாக்க பிரிவு ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு - சிலைகடத்தல் தடுப்பு ஐஜி.யான டி.எஸ்.அன்பு, திருவள்ளூர் - ரயில்வே ஐஜி. வனிதா, விழுப்புரம் - பயிற்சி பிரிவு ஐஜி. சத்யபிரியா, கடலூர் - வடக்கு சரக ஐஜி. நாகராஜன், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் - பயிற்சி பிரிவு ஐஜி.யான எம்.சி.சாரங்கன், புதுக்கோட்டை - சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி. லலிதாலட்சுமி, தஞ்சாவூர் - டிஐஜி செந்தில்குமாரி, திருவாரூர் - ஆயுதப் பிரிவு ஐஜி. தமிழ்சந்திரன், நாகப்பட்டினம் - மத்திய சரக ஐஜி. ஜெயராமன்.
இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு, மீட்பு பணிக்கு 37 காவல்துறை உயர் அதிகாரிகளை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தர விட்டுள்ளார்.
புயல், மழை தொடர்பான அவசர உதவிக்கு காவல் துறையினரை தொடர்பு கொள்ள அந்தந்தமாவட்டத்துக்கு பிரத்யேக தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் ‘1077’ என்ற இலவச தொலைபேசி எண் அல்லது 044-24343662, 044-24331074 என்றஎண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.