பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரை நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக ஜெயங்கொண்டத்தில் நேற்று முன்தினம் இரவு மேலகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(23) உட்பட 5 பேர் கட்சிக் கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோர மின்கம்பி மீது எதிர்பாராதவிதமாக கொடிக் கம்பம் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சதீஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.