தமிழகம்

நாளை விடுமுறை இல்லை; பெட்ரோல்-டீசல் விற்பனை உண்டு: பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நாளை நிவர் புயல் கரையைக் கடப்பதை அடுத்து அரசு பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்துள்ளது. நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விற்பனை உண்டு என பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

“தமிழக அரசு நிவர் புயலை எதிர் கொள்ள, நாளை (25.11.20) பொது விடுமுறை அறிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விற்பனை அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல்டீசல் விற்பனை நிலையங்களும் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கும்.

நாளை புயலினை எதிர்கொள்ளும் மாவட்டங்களான கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல் டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். புயல் கரையை கடந்த பிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல விற்பனை நடைபெறும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT