மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே தங்கத்தாலான முகக்கவசம் அணிகிறேன் என்று வரிச்சியூர் செல்வம் தெரிவித்தார்.
மதுரை-சிவகங்கை மெயின் ரோட்டில் அமைந்துள்ள வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (எ) வரிச்சியூர் செல்வம்(53). ரவுடி என ஒரு காலத்தில் போலீஸாரால் அழைக்கப்பட்டாலும், தற்போது அவர் குற்றச் செயல்களைத் தவிர்த்து ஒதுங்கி வாழ்கிறார். எப்போதும் பிறரைவிட வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக உடல் முழுவதும் நகைகள் அணிவதில் அலாதி பிரியம் கொண்டவர். தற்போது கரோனாவைத் தடுக்க முகக்கவசத்தையும் அவர் தங்கத்தில் அணிந்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியிருப்பதாவது: நான் வெளியில் செல்லும்போது சுமார் 300 பவுன் வரை நகைகளை அணிந்து செல்வேன். அதற்கு மேல் சுமக்க முடியவில்லை.
இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க முகக் கவசத்தை மட்டும் துணியால் அணிவது வேறு மாதிரி இருந்தது. எனவே முகத்தை அளவெடுத்து சுமார் 10 பவுனில் முகக்கவசம் செய்தேன்.