கரோனா கட்டுப்பாடுகளால் மூடப் பட்டிருந்த வனத்துறைக்கு சொந்த மான சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதிகளை எட்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று சுற் றுலாப் பயணிகள் கண்டு ரசித் தனர்.
கொடைக்கானலில் கரோனா ஊரடங்கு காலத்துக்குப் பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக் கப்பட்டனர். கடந்த புதன்கிழமை முதல் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள வனத்துறைக்குச் சொந்த மான சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. இதன்பிறகு விடு முறை நாட்கள் இல்லாததால் சுற் றுலாப் பயணிகள் அதிகளவில் வரவில்லை. இந்நிலையில் வார விடுமுறையான நேற்று கொடைக் கானலுக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்திருந்தனர். இவர் கள் 8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மோயர் பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமைப் பள்ளத் தாக்கு ஆகிய இடங்களைக் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானலில் பெரும் பாலான சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு விட்ட நிலையில், இதுவரை ஏரியில் படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.