முதல்வர் ஜெயலலிதா இன்று கோடநாடு செல்வதால், அமைச்சர்களுடன் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி முடிந்தது. மறுநாள் சிறுதாவூர் சென்ற முதல்வர் ஜெயலலிதா, 10-ம் தேதி போயஸ் கார்டன் வீட்டுக்கு திரும்பினார். 12-ம் தேதி தலைமைச் செயலகத்தில் புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார். இன்று காலை 11 மணிக்கு அவர், கோடநாடு புறப்பட்டு செல்கிறார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் இல்லத்துக்கு வருமாறு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு வந்தது. தலைமைச் செயலகத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் றிருந்த அமைச்சர்கள் 12 மணிக்கே போயஸ் கார்டனுக்கு வந்தனர். மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணிவரை அமைச்சர்களுடன் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
துறைவாரியாக தேங்கியுள்ள பணிகள், 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் வெளி யிடப்பட்ட அறிவிப்புகள், தொகுதிகளில் இலவச பொருட்களின் விநியோகம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த முதல்வர், பணி களை விரைவில் முடிக்க அமைச்சர் களுக்கு உத்தரவிட்ட தாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது தொடர் பாகவும் முதல்வர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.