தமிழகம்

கடலூர் மாவட்ட தேர்தல் பணிகளில் களமிறங்கியது அதிமுக: கையை பிசைந்து நிற்கிறது திமுக

செய்திப்பிரிவு

2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு, வாக்காளர்களை சந்தித்து வரு கின்றன.

அதிமுகவினர், கடந்த சில வாரங்களாக நகர, ஒன்றியம், கிளை என கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி, அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பயனாளிகளிடம் சென்றடைந் திருக்கிறதா, யார் யார் விடுபட்டுள் ளனர் என்று ஆராய்ந்து வருகின் றனர்.

மேலும், பூத் கமிட்டிக் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகி றது. பூத் கமிட்டி செலவுக்கும் கட் சித் தலைமையால் சில ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளதாம்.

இதுதவிர கிளைக் கழக நிர் வாகிகளை அழைத்து கூட்டம் போடுவதும் நடக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுவினரை அழைத்துக் கூட்டம் நடத்தி, கூட்டத்தில் பங் கேற்போருக்கு, தேநீர், சிற்றுண்டி அளிக்க வேண்டும்; அவர்கள் குறை கூறாத அளவிற்கு கவ னித்து அனுப்ப வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்களாம்.

சால்வை மரியாதை வேண்டாம்

எக்காரணம் கொண்டும் மேல் நிலை நிர்வாகிகள் கீழ்நிலை நிர்வாகிகளிடமிருந்து, துண்டு போர்த்தி கவுரவிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. கூடு மான வரையில் கட்சி நிர்வாக கூட்டங்களுக்கு வருவோருக்கு வந்து செல்லும் வாகனத்திற்கான எரிபொருள் செலவு அல்லது வாகன வாடகை உள்ளிட்ட தொகையை அளித்து உதவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளனராம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும்நடத்தப்பட்ட கூட்டங்கள் வாயிலாகஒரு பூத்துக்கு தலா ரூ. 15 ஆயிரம் வரை செலவுக்காக வழங்கப்பட்டுள்ளதாம்.இதனால் அதிமுக நிர்வாகிகள் ஆரவாரத்தோடு தேர் தல் களப்பணி இறங்கியிருப்பதை கடலூர் மாவட்டத்தில் பார்க்க முடிகிறது. குறிப்பாக பண்ருட்டி தொகுதியில் இந்த உற்சாகத்தை பார்க்க முடிகிறது.

தொண்டர்களின் வருத்தம்

திமுகவிலும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் அதிககவனம் செலுத்த வேண்டும் என்ப தோடு, உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரம் காட்டவேண்டும் என்று கூட்டத்தில் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. கட்டளை பிறப் பித்து வேலை வாங்குவோர், போக்குவரத்து செலவுக்கு கூட எதுவும் கொடுப்பதில்லையே என ஆதங் கப்படுவதை கடலூர் மாவட்ட திமுகவினரிடையே காண முடிகிறது.

ஒவ்வொரு முறையும், ஆர்ப் பாட்டம் மற்றும் கூட்டத்திற்கு ஆள் சேர்த்து வாகனத்தில் அழைத்துச் சென்றால் அதற்கான தொகையை வழங்கவில்லை என்று கிளைக் கழக நிர்வாகிகள். குமுறுகின்றனர். தலைமை இதுவரை எதுவும் வழங்கவில்லை. தலைமை வழிகாட்டினால் வழங்குகிறோம் என்று மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் இருந்து பதில் வருகிறது.

தற்போதைய நிலையில் திமுக கையை பிசைந்து நிற்கும் நிலையில், அதிமுக கை நிறைய கலகலப்போடு களத்தில் சுழலத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT