மாதனூர் அருகேயுள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கர்நா டக மாநில பதிவெண் கொண்ட காரில் கடத்திய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகைக்கடை தெருவைச் சேர்ந்தவர் திலீப் குமார் (51). தங்க நகை வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். மாதனூர் அருகேயுள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் இருந்து அவரை மர்ம நபர்கள் காரில் கடத்தியதாக தகவல் பரவியது.
இதுகுறித்த தகவலின்பேரில் ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் திலீப்குமாரின் சகோதரர் மனோகர்லால் அளித்த புகாரில், ‘‘நில புரோக்கர் ரத்தினம் என்பவர் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள ரோஸ் கார்டனில் உள்ள மனைப் பிரிவை வாங்க சிலர் வந்திருப்பதால் இடத்தை நேரடியாக வந்து காட்டும்படி அழைத்துச் சென்றார். நிலத்தை காட்டிவிட்டு காரில் ஏற முயன்றபோது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த நபர்கள் திடீரென எனது சகோதரரை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து எனது சகோதரரின் கார் ஓட்டுநர் சேகர் மற்றும் ரத்தினம் கூறிய தகவலின்பேரில் கடத்தப்பட்ட எனது சகோதரரை மீட்டுத்தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் கடத்தப் பட்ட நபர்கள் குறித்தும் அவர் கள் வந்த கார் எந்த வழியாகச் சென்றது எங்காவது கண்காணிப்பு கேமராவில் பதி வாகியுள்ளதா? என்றும் பணத் துக்காக கடத்தப்பட்டாரா? அல் லது வேறு ஏதாவது காரணத் துக்காக கடத்தப்பட்டாரா? என காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் வந்த நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.