தமிழகம்

5 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் அதிகரித்துள்ளது. மே மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து மக்களை குளிர்வித்தது.

தற்போது எப்போதும் போல வெயிலின் அளவு அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் அளவு நூறு டிகிரிக்கு மேல் சென்றது. குறிப்பாகத் திருச்சி மாவட் டத்தில் 105 டிகிரி, கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் 103 டிகிரி, மதுரை, சேலம் மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

சென்னையை பொருத்த வரை நுங்கம்பாக்கத்தில் 101 டிகிரி, மீனம்பாக்கத்தில் 103 டிகிரி வெயில் தாக்கியது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறுகையில், “வானத்தில் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக இருப்ப தால் வெயிலின் தாக்கம் அதிக மாக இருப்பதுபோல் உள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்றார். திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த நிலவரப்படி நீலகிரி மாவட்டம் கேதியில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT