அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி பல்கலைக்கழக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.பரத் 
தமிழகம்

துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக அண்ணா பல்கலை. ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

துணைவேந்தர் எம்.கே.சுரப்பாவுக்கு ஆதரவாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் நேற்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா, பேராசிரியர் நியமனத்தில் தலா ரூ. 13 லட்சம் முதல் ரூ.15 லட்சம் பணம் பெற்று, ரூ. 80 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாகவும், ரூ. 200 கோடிஅளவுக்கு பல்கலைக்கழக நிதியில் கையாடல் செய்து இருப்பதாகவும் திருச்சியைச் சேர்ந்தசுரேஷ் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இதன்அடிப்படையில், சுரப்பா மீதான முறைகேடு புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை தமிழக அரசு கடந்த வாரம் அமைத்தது.

இந்நிலையில், துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, துணைவேந்தர் சுரப்பா மீது எந்தத் தவறும் இல்லை. எனவே, நேர்மையான துணைவேந்தரை தமிழக ஆளுநர் காக்க வேண்டும் என்றும் விசாரணைக் குழுவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

SCROLL FOR NEXT