தமிழகம்

ஆர்.கே.நகரில் அக்.17-ல் வேலைவாய்ப்பு முகாம்: தொழிலாளர் நலத்துறை சார்பில் நடக்கிறது

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் தொழி லாளர் நலத்துறை சார்பில் இம்மாதம் 17-ம் தேதி 300 நிறுவனங் கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் தொழி லாளர் நலத்துறை சார்பில், அக்டோபர் 17-ம் தேதி தண்டை யார்பேட்டை,  பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டரங்கில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் 300-க்கும் மேற் பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் பயின்றவர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த முகாம் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன் பேசும் போது, ‘‘முதல்வர் வெற்றி பெற்ற தொகுதியில் நடக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் அதிகள வில் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதற்கான பணிகளை அனைத்து துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும். தேவையான குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, போக்கு வரத்து வசதிகளை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் குமார் ஜெயந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT