தமிழகம்

நாம் தமிழர் கட்சியின் வேல் நடை பயணத்துக்கு அனுமதி மறுப்பு

கி.மகாராஜன்

நாம் தமிழர் கட்சி சார்பில் வேல் நடை பயணம் நடத்த அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு நாளை (நவ.21) வேல் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கேட்டு பழனி மண்டல நாம் தமிழர் கட்சி செயலர் கஜா, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் வேல் நடை பயணத்துக்கு அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் நிலையில், அனைத்து மதத்தினரும் அனுமதி கேட்க வாய்ப்புள்ளது. எனவே வேல் நடை பயணத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்றார்.

ஜனவரி மாதம் வேல் நடைபயணம் நடத்த மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் என்று கூறி விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT