கடந்த சில நாட்களில் திருப்பூ ரில் ‘செகன்ட்ஸ் பனியன்’ வர்த் தக மையமான காதர்பேட்டை கடைகளில் நடந்த திடீர் சோத னையில் மட்டும் ரூ.6 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வணிகவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்பூர் ரயில் நிலையத்துக்கு எதிர்புறம் இருக்கும் இந்த காதர் பேட்டையில் 700-க்கும் மேற் பட்ட கடைகள் உள்ளன. இதன் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.100 கோடியை தாண்டும். முன்பெல் லாம் காதர்பேட்டையில் குறைபாடு உள்ள பனியன் துணிகளை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி வந்து ‘செகன்ட் சேல்ஸ்’ என்ற பெயரில் விற்பார்கள். ஆனால், இப்போது பெரும்பாலான கடை களில் நேரடி விற்பனையையே ‘செகன்ட் சேல்ஸ்’ பெயரில் விற்கிறார்கள். இதற்கு பில்லும் இல்லை; வரியும் இல்லை. இப்படி வரி போடாமல் இருப்பதற்கு மட்டும் உள்ளூர் அதிகாரிகளுக்கு பணம் கைமாறுவதாக சொல் லப்படுகிறது. இது குறித்து மேலி டத்துக்கு புகார் சென்றதைத் தொடர்ந்து வணிகவரித்துறை அதி காரிகள் தொடர்ச்சியாக காதர்பேட் டையின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 1 முதல் சோதனை நடத்தினர்.
கடந்த 7-ம் தேதி மட்டும் கோவையிலிருந்து வந்த கோவை கோட்ட வணிக வரித்துறை செய லாக்கப் பிரிவு இணை ஆணையர் மரியம் பால்தேவ் தலைமையில் கடைகளில் சோதனை நடத்தினர். இதில் மட்டும் சுமார் ரூ.4 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில் 8-ம் தேதி காதர் பேட்டை கடைகளை அடைத்து அதி காரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பி னும் அடுத்தடுத்த நாட்களும் வணிக வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்ந்தது.
‘நாங்கள் முறையாகவே வியாபாரம் செய்து வருகிறோம். அதிகாரிகள் அத்துமீறி எங்கள் தொழிலை பாதிக்கிறார்கள்’ என் பது வணிகர்களின் குற்றச்சாட்டு.
இதற்கு வணிக வரித்துறை அலுவலர்கள் தரப்பு கூறும்போது, ‘கடந்த ஒரு மாதத்தில் நடத்திய ஆய்வில், திருப்பூரில் உள்ள ஆடை வர்த்தக நிறுவனங்கள், 6 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது என்றனர்.
ஆனால், திருப்பூர் அதிகாரிகள் தரப்பினர் ‘வரும் 2016 ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதன் எதிர்விளைவே இந்த வணிக வரி சோதனைகள்’ என்று கூறினர்.
இது குறித்து கோவை கோட்ட வணிக வரித்துறை செயலாக்கப் பிரிவு இணை ஆணையர் மரியம் பால்தேவ் கூறும்போது, ‘திருப்பூரில் வழக்கமான சோதனை தான் நடந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கும் இதுக்கும் தொடர்பில்லை’ என்றார்.