தமிழகம்

‘நான் தான் பாலா’ தயாரிப்பாளர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

நடிகர் விவேக் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது, திருப்பூர் போலீஸார் நேற்று வழக்கு பதிந்தனர்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது:

நடிகர் விவேக் நடித்து சமீபத்தில் வெளியான ‘நான் தான் பாலா’ படத்தை, எஸ்எஸ்எஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. திருப்பூர் சாய் பிளீச்சர்ஸ்- எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சு.சங்கரநாராயணன், இத்திரைப்படத்தின் திருப்பூர், கோவை பகுதி விநியோக உரிமையை, ரூ.25 லட்சம் கொடுத்து பெற்றார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லையாம். இதனால், படத்தயாரிப்பாளரான ஜெ.ஏ.லாரன்ஸிடம், பணத்தை திருப்பித் தர வலியுறுத்தினார் சங்கரநாராயணன்.

இந்நிலையில், பணத்தை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் கூறி, திருப்பூர் தெற்கு போலீஸாரிடம் சங்கரநாராயணன் புகார் அளித்தார். அதன்பேரில், திரைப்படத் தயாரிப்பாளர் ஜெ.ஏ.லாரன்ஸ் உட்பட 3 பேர் மீது, திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT