ந.தியாகராஜன் 
தமிழகம்

மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு, மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இருந்த நட்பால் பிரச்சினை எழுந்துள்ளது.

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக காவலர் தரப்பைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது, காவலர் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் பேசியதாகக் கூறி ஒரு ஆடியோ வெளியானது.

இந்நிலையில் இரு சமுதாயத்தினரிடம் மோதலை உருவாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தகாத வார்த்தைகளால் பேசியதாக காடுவெட்டி தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி போலீஸில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் 5 பிரிவுகளின் கீழ் காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT