திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் பெரிய தெருவின் பின்னால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர். 
தமிழகம்

திருக்கழுக்குன்றத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: வடிகால்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

ருத்ரான் கோயில் புதுவட்டாரம், தேசுமுகிபேட்டை மற்றும் பெரிய தெரு ஆகியபகுதிகளில் மழைநீர் வடிவதற்கான கால்வாய்கள், தூர்வாரப்படாமல் உள்ளதால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பேரூராட்சி பகுதிகளில் பெய்த கனமழையால் பெரிய தெரு,புதுவட்டாரம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்த மழைநீர் ருத்ரான் ஏரி, பெரிய ஏரி, மங்களம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால்,வடிகால்வாய்கள் தூர்வாரிசீரமைக்கப்படாமல் உள்ளதால் மழைநீர் கால்வாயில் செல்ல முடியமால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயல் அலுவலர் கூறும்போது, "மேற்கண்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் பெரிய ஏரிக்கு செல்லும் வகையில் விரைவில் சரிசெய்யப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT