மதுரை நகரில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களை துல்லியமாகக் கண்டறிய நவீன தொழில்நுட்ப வசதியை போலீஸார் பயன்படுத்த உள்ளனர்.
தீபாவளிக்கு முன்பு, மதுரையில் மக்கள் அதிகமாகக் கூடும் பஜார் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல் துறை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியது.
இதற்காக திலகர் திடல், விளக்குத்தூண் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் நெட்வொர்க்கை ஒருங்கிணைத்து, முகக்கவசம் அணியாத மக்களைக் கண்டறிந்து, அவர்களது புகைப்படத்துடன் எச்சரிக்கை சமிக்ஞையை ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் உதவியோடு சம்பந் தப்பட்ட காவல் அதிகாரியின் மொபைல் போனுக்கு அனுப்பும் வகையில், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்கள், சாலை விதி மீறலில் ஈடுபடு வோரைக் கண்காணித்து பிடிக்க, இந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து சிக்னல், வாகனத் தணிக்கை மூலம் விதி மீறும் நபர்களின் முகம், அவர் களது பைக் எண்ணை புகைப்படம் எடுத்து அதிகாரிகளின் மொபைல் போனுக்கு அனுப்பும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த காவல்துறை தொழில்நுட்பக் குழுவினர் காவல் ஆணையரிடம் யோசனை தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியது: மதுரையில் முகக்கவசம் அணியாதது போன்ற விதிகளை மீறியதாக, இதுவரை 46,477-க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போது விதிமீறல்களை ஆதாரத்துடன் கண்டறிந்து, சம் பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய மென்பொருள் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தனியார் நிறுவனம் மூலம் தற்போது முகக்கவசம், ஹெல்மெட் அணியாதவர்கள் உள்ளிட்ட விதிமீறுவோரைக் கண்டறிய சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக இரு காவல் நிலைய எல்லையிலுள்ள 40 சிசிடிவி கேமராக்கள் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நகரின் பிற பகுதிகளுக்கும், மக்கள் நெருக்கமான இடங் களுக்கும், போக்குவரத்து மிகுந்த சாலைகளிலும் இத்திட்டம் விரிவு படுத்தப்படும். தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டினால் இனி தப்பமுடியாது என்றார்.