தமிழகம்

அதிமுகவுடன் பாஜகவுக்கு அரசியல்ரீதியான உறவு இல்லை: முரளிதர ராவ் உறுதி

செய்திப்பிரிவு

அதிமுகவுடன் பாஜகவுக்கு அர சியல் ரீதியிலான உறவு இல்லை என்றார் பாஜக தேசியச் செய லாளர் முரளிதர ராவ்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலை மையில் பாஜக ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் பேசியதாவது:

அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகளாக உள்ளன. கூட்டணியில் உள்ள பாமக, முதல்வர் வேட்பாளரை அறிவித் துள்ளது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத் தில், முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டுதான் போட்டியிட வேண்டும் என்றால் அதுபற்றி கூட் டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். பாஜக முக் கியத் தலைவர்கள் தமிழக முதல் வரைச் சந்திப்பது அரசு நிர்வாக ரீதியிலானது. இதை வைத்து, அதிமுகவுடன் பாஜக அரசியல் ரீதியான உறவு வைத்துள்ளதாக கருதுவது தவறு என்றார்.

SCROLL FOR NEXT