தமிழகம்

ஆசிரியர் போராட்டம் தொடர்பான வழக்கு: அரசு, சங்கங்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகிறது.

இப்போராட்டத்தை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் முன்னேற்ற அமைப்பின் தலைவர் பி.ஆரோக்கியதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அரசு சாரா ஆசிரியர் சங்கங்களின் தலைவர் கள் அரசியல் கட்சித் தலைவர் களுடன் சேர்ந்துகொண்டு அரசுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இது, ஆசிரியர் களின் நலனுக்கு எதிரானதாகும். தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக் காக நடத்தப்படும் இப் போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும்.

போராட்டம் அறிவித்துள்ள ஆசிரியர் சங்கங்கள் மீது பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு தமிழக அரசும், ஆசிரியர் சங்கங்களும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT