வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றுப்பகுதிகளில் இரவு, பகல் பாராமல் மணல் கடத்தல் அதிகரித்து வருவதாகவும், பாலாற்றங்கரையையொட்டியுள்ள மயானப்பகுதிகளில் உடல்களை தோண்டி எடுத்து மணல் கடத்தல் நடைபெறுவதை மாவட்ட காவல் துறை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியையொட்டியுள்ள பாலாற் றங்கரையும், அதன் அருகாமையில் மயானப்பகுதியும் உள்ளது.
மேட்டுப்பாளையம், இந்திரா நகர், உதயேந்திரம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் யாராவது உயிரிழந்தால் இந்த மயானப் பகுதியில் நல்லடக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில், மயானப் பகுதியையொட்டியுள்ள பாலாற் றில் மணல் கடத்தும் கும்பல், பாலாற்றங்கரை மயானப்பகுதியில் புதைக்கும் உடல்களை வெளியே தோண்டி எடுத்து வீசிவிட்டு, மணலை கடத்துவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப் பாளையம், கொடையாஞ்சி, அம்பலூர், திமமாம்பேட்டை, சி.வி.பட்டறை, ஜாப்ராபாத், சென் னாம்பேட்டை, கச்சேரி சாலையை யொட்டியுள்ள கிளை பாலாற்றுப் பகுதிகளில் இரவு, பகல் பாராமல்மணல் கடத்தல் நடைபெறுகிறது.
இரவு நேரங்களில் மாட்டு வண்டி கள், டிப்பர் லாரிகளிலும், பகல் நேரங்களில் இரு சக்கர வாகனங் களில் சிமென்ட் மூட்டைகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் பகுதியையொட்டியுள்ள பாலாற்றங்கரையோரம் உள்ள மயானப் பகுதியில் சுமார் 15 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி மணல் அள்ளப்படுகிறது. அவ்வாறு மணல் அள்ளும்போது மயானப் பகுதியில் புதைக்கப்படும் உடல் களை வெளியே தோண்டி எடுத்து வீசிவிட்டு மணலை அள்ளிச்செல் கின்றனர்.
இதனால், மயானப்பகுதியில் எங்கு பார்த்தாலும் மனித எலும்புகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள் ளது. இது மட்டுமின்றி பாலாற்றுப் பகுதியில் சில இடங்களில் ஆழ் துளைக் கிணறுகளுக்காக அமைக் கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை யும் மணல் கடத்தல் கும்பல் சேதப்படுத்தி விடுகின்றனர்.
காவல் துறையினரும், பொதுப் பணித்துறையினரும் உரிய நடவ டிக்கை எடுப்பதில்லை. எனவே, மாவட்ட காவல் துறை நிர்வாகம் பாலாற்றுப்பகுதிகளில் கடத்தப் படும் மணல் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து வாணியம்பாடி காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மணல் திருட்டை தடுக்க தினசரி காவல் துறையினர் சுழற்சி முறையில் பாலாற்றை யொட்டியுள்ள பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அது மட்டுமின்றி மாவட்ட காவல் துறை சார்பில் தினசரி இரவுப்பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் செல்போன் எண்கள் ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் எந்த பகுதியில் மணல் கடத்தல் நடக் கிறது என தயங்காமல் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.
அதேநேரத்தில் தொடர் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்திலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.