புதுச்சேரியில் இன்று புதிதாக 72 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை 96.01 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ.17) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 3,393 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 39 பேருக்கும், காரைக்காலில் 13 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும், மாஹேவில் 16 பேருக்கும் என மொத்தம் 72 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 608 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 256 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 587 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் 843 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 131 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 958 (96.01 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3 லட்சத்து 63 ஆயிரத்து 331 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3 லட்சத்து 21 ஆயிரத்து 971 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது".
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.