மதுரை கீழவெளி வீதியில் தேவால யம் அருகே நேற்று முன்தினம் மாலை தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட இளைஞர் ரவுடி வெள்ளக்காளியின் கூட்டாளி என சந்தேகிக்கப்படுகிறது.
மதுரை உத்தங் குடியைச் சேர்ந்த பாரதிகணேசன் என்ப வரது மகன் முருகானந்தம் (22). இவர் நேற்று முன்தினம் மாலை கீழவெளி வீதியில் தேவாலயம் அருகே காரில் வந்த ஒரு கும்பலால் தலையைத் துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கீரைத்துறை போலீஸார் நடத்திய விசாரணை யில் சம்பவத்தின்போது முரு கானந்தத்துடன் நடந்து சென்ற கீரைத்துறையைச் சேர்ந்த முனிய சாமி என்ற ரவுடிக்கும் அரிவாள் வெட்டு விழுந்து ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவர் ராஜ பாண்டி யின் உறவினர் வெள்ளக்காளி யின் கூட்டாளி எனத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துணை ஆணையர் சிவ பிரசாத் தலைமையில் காவல் ஆய்வாளர், 4 எஸ்ஐக்கள் அடங் கிய தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை சேகரித்து கொலை யாளிகளை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே.குருசாமியின் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில், வெள்ளக்காளியின் ஆதரவாளர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. நேற்று முன்தினம் தலை துண்டித்து கொல்லப்பட்ட முருகானந்தத்துடன் சென்ற காளியின் கூட்டாளி முனிய சாமியைக் கொலை செய்யத் திட்ட மிட்டுள்ளனர். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார். முருகானந்தம் மீது பெரிய அளவில் வழக்குகள் இல்லை. ஆனாலும் அவரைக் கொலை செய்துள்ளனர். இதில் வெட்டுக்காயத்துடன் முனிய சாமி தப்பியதால் ஆத்திரத்தில் முருகானந்தத்தைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக் கிறோம். கொலையாளிகள் குருசாமியின் கோஷ்டியாக இருக் கலாம் என்ற கோணத்தில் விசா ரித்து வருகிறோம் என்றனர்.
இதற்கிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய காமராஜர்புரத்தைச் சேர்ந்த அழகுராஜா, அலெக்ஸ், பவுலு ஆகிய 3 பேர் மீது கீரைத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் அச்சம்
தமிழ் சினிமாவை விஞ்சும் வகையிலான இக்காட்சி கேம ராவில் பதிவாகி உள்ளது. இக்காட்சி சமூகவலைத்தளங்களில் பரவியதால் நகர் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் போலீஸாருக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பழைய குற்ற வாளிகளைக் கண்காணித்தாலும் பழிக்குப் பழியாகக் கொலைச் சம்பவம் நடக்கிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும்,’’ என்றார்.