இன்ஸ்பெக்டர் கண்ணன் 
தமிழகம்

சிறப்பாகப் பணிபுரிந்ததை பாராட்டி தென் மாவட்ட காவல் துறையினர் 15 பேருக்கு மத்திய அரசு விருது

செய்திப்பிரிவு

தமிழக காவல்துறையில் குறிப் பாக தென் மாவட்டங்களில் பணி புரியும் 15 பேருக்கு சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலக் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தவர்களுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட சேவா படக், உத்கிருஷ்ட சேவா படக் ஆகிய விருதுகள் வழங்கப் படுகின்றன.

இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் அண்மை யில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் எவ்விதக் குற்றச் சாட்டும் இன்றி சிறப்பாகப் பணி புரிந்த 2 காவல் கண்காணிப்பாளர் கள், 20 டி.எஸ்.பி.க்கள், 40 காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ.கள், காவலர்கள் என மொத்தம் 274 பேர் விருதுபெறுவோர் பட்டி யலில் இடம் பெற்றுள்ளனர். இதில், தென் மாவட்டங்களில் மட்டும் 15 பேர் இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

இதன்படி, கடந்த 18 ஆண்டு களாகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக மதுரை நகர் போக்குவரத்துக் காவல் உதவி ஆணையர் திருமலைக்குமார், மதுரை நகர் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் தர்ம லிங்கம், ஆள் கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமா மாலா, சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன், திண்டுக்கல் உளவுத் துறை ஆய்வாளர் முத்துலட்சுமி, தூத்துக்குடி மேக்னாபுரம் காவல் நிலைய எஸ்.ஐ. பச்சைமால், மதுரை வாலாந்தூர் காவல் நிலைய எஸ்.ஐ. அருண்குமார், நெல்லை நகர் காவல் தொழில்நுட்பப் பிரிவு எஸ்.ஐ. உலகம்மாள், விருதுநகர் தொழில்நுட்பப் பிரிவு எஸ்.ஐ. ராஜபாண்டியன் ஆகியோர் ‘உத்கிருஷ்ட சேவா படக்’ விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.

25 ஆண்டுகள் சிறப்பாகப் பணி யாற்றியதற்காக ராமநாதபுரம் ஆயுதப்படை காவல் ஆய் வாளர்கள் மோகன்குமார், முத்துராமலிங்கம், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எஸ்.ஐ. நாகராஜன், சிவகங்கை ஆயுதப்படை எஸ்.ஐ. என்.ஜெயேந்திரன் (தற் போது மானாமதுரை டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரிகிறார்), நாகர்கோவில் சிறப்பு எஸ்.ஐ. முருகேசன், ராமநாதபுரம் சிறப்பு எஸ்.ஐ. அர்ச்சுனன் ஆகியோர் ‘அதி உத்கிருஷ்ட சேவா படக்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு விரைவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுபெறும் அதிகாரிகள், காவலர்களுக்கு வாழ்த்து தெரி வித்து உயர் அதிகாரிகள் பாராட்டி யுள்ளனர்.

SCROLL FOR NEXT