திருநெல்வேலி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வரும் இரு நாட்களுக்கு (16.11.2020, 17.11.2020) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசியth தேவைகள் இன்றி வெளியே செல்ல வேண்டாம். தாமிரபரணி கரையோரப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆறு மற்றும் குளம் ஆகிய பகுதிக்கு செல்லவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
மழை நேரம் என்பதால் மின் சாதனங்கள் கையாள்வதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஈரமான கைகள் கொண்டு மின் சாதனத்தை பயன்படுத்தாதீர்கள்.
குழந்தைகளை மின்சாதனம் அருகில் செல்ல அனுமதிக்காதீர்கள். மழைக்காலங்களில் சாலைகளில் அதிகமாக பயணம் செய்வதை தவிருங்கள். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மிகவும் கவனமாக பயணம் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.