நவ.23-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நெருங்கி வருகிறது. தமிழகத்தில் அதிமுக அரசின் செயல்பாடு, மத்திய அரசின் திட்டங்கள், நடப்பு அரசியல், கூட்டணிக் கட்சிகளுடனான நிலைப்பாடு, தற்கால அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் விவாதிக்க உள்ளது.
உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்படுவது சம்பந்தமாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு:
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவம்பர் 23 (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.
பொருள் : திமுக ஆக்கப் பணிகள்
அதுபோது உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.