திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி விஜயலட்சுமி இன்று (திங்கள்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 14. 02.20 முதல் 30.10.20 20 வரை மாவட்டம் முழுவதிலும் இருந்து 18 வயது பூர்த்தி அடைந்த அவர்களிடமிருந்தும், விடுபட்டவர்களிடமிருந்தும் மொத்தம் 38 ஆயிரத்து 647 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் தகுதி உடைய 5 ஆயிரத்து 808 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 18 லட்சத்து 16 ஆயிரத்து 281 பேர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் : 8 லட்சத்து 86 ஆயிரத்து 835 பேர், பெண் வாக்காளர்கள் : 9 லட்சத்து 29 ஆயிரத்து 278 பேர், இதரர் : 168 உள்ளனர்
வருகின்ற 21, 22 மற்றும் டிசம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மாவட்டத்திலுள்ள வரையறுக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதில் புதிதாக படிவத்தைப் பூர்த்தி செய்தும் வழங்கலாம்" எனத் தெரிவித்தார்.