தமிழகம்

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: பெண் டிஎஸ்பி உட்பட 3 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக அவரது மற்றொரு தோழியான கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பெண் டிஎஸ்பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பி ஆர்.விஷ்ணுபிரியா, கடந்த 18-ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவரது பெற்றோர், நண்பர்கள் மற்றும் காவல்துறையில் அவருடன் உடன் பணிபுரிந்தவர்களிடம் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே கோயில் குருக்கள் விஜயராகவன், கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, வழக்கறிஞர் மாளவியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று விஷ்ணுபிரியாவின் மற் றொரு தோழியான கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் டிஎஸ்பியாக பணிபுரியும் கீதாஞ்சலி என்பவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.

அதையடுத்து, நேற்று சேலம் சிபிசிஐடி அலுவலகத்துக்கு கீதாஞ் சலி வந்தார். அவரிடம் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி னர். அதுபோல் சேலம் மாவட் டம், ஆத்தூர் மதுவிலக்கு இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் வேலாயுதன் ஆகியோரிடமும் விசா ரணை நடைபெற்றது.

விசாரணை குறித்து டிஎஸ்பி கீதாஞ்சலி மற்றும் இரு இன்ஸ்பெக்டர்களும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

விஷ்ணுபிரியா எழுதிய கடிதத் தின் இரு பக்கம் நேற்று முன் தினம் வெளியாகியிருந்தது. அந்த கடிதத்தில் கீதாஞ்சலிக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும்படி குறிப்பிட் டிருந்தார். அதுபோல் ஆத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஆரோக் கியராஜ், டிஎஸ்பி தற்கொலை சம்பவத்தின்போது நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக் டராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT