திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 20 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 11, மணிமுத்தாறு- 3, அம்பாசமுத்திரம்- 13, சேரன்மகாதேவி- 2.40, ராதாபுரம்- 19, நாங்குநேரி- 2, பாளையங்கோட்டை- 6, திருநெல்வேலி- 3.
பாபநாசம் அணை நீர்மட்டம் 100.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,389 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 81.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,120 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 97.83 அடி, வடக்கு பச்சையாறு- 10.25 அடி, நம்பியாறு- 8.46 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 35 அடியாக இருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணையில் 15 மி.மீ. மழை பதிவானது. சிவகிரியில் 11 மி.மீ., கருப்பாநதி அணையில் 5 மி.மீ., கடனாநதி அணையில் 4 மி.மீ., அடவிநயினார் அணையில் 3 மி.மீ., சங்கரன்கோவில், செங்கோட்டையில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.
நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரி க்கவில்லை. பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
குண்டாறு அணை மட்டும் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 68 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 57.91 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 96 அடியாகவும் இருந்தது.
நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. குண்டாறு அணை முழு கொள்ளளவில் உள்ளது.